கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள சித்திரைச்சாவடி பகுதியில் நேற்று பறந்து வந்த கழுகின் முதுகு பகுதி மற்றம் முன் பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தது. இதைகண்ட கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் கழுகு எங்கிருந்து வந்தது, யார் அனுப்பினார்கள்? அதில் உள்ள கேமரா எத்தகைய செயலுக்காக அனுப்பப்பட்டது என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.