பண்ருட்டி: இந்து மக்கள் கட்சியினர் 10 பேர் கைது

55பார்த்தது
மாநில இந்து மக்கள் கட்சியின் இளைஞரணி நிர்வாகி ஓம்கார் பாலாஜி மீது பொய் வழக்கு தொடர்ந்து அவரை கைது செய்த தமிழக அரசை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்காமல் போலீசார் தடை விதித்தனர். இந்த நிலையில் நேற்று பண்ருட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள அன்னை இந்திராகாந்தி சாலையில் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில் 10 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி