சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழப்பு

52பார்த்தது
சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழப்பு
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையம் எதிரில் உள்ள ஓட்டலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கியாஸ் கசிவு காரணமாக ஏற்பட்ட தீவிபத்தில் காராமணிக்குப்பத்தை சேர்ந்த வீரப்பன் என்பவர் உள்ளிட்ட 7 பேர் பலத்த காயமடைந்தனர்.

அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வீரப்பன் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி