பண்ருட்டி அருகே உள்ள விசூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 40). இவர் கடந்த மாதம் 27-ந் தேதி பண்ருட்டி ஒருங்கிணைந்த நீதி மன்றத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது அவர் தனது மோட்டார் சைக்கிளை நீதிமன்ற வளாகம் எதிரில் உள்ள கடலூர் சாலையோரத் தில் நிறுத்தி இருந்தார். நீதிமன்றத்திற் குள் சென்று விட்டு, திரும்பி வந்து பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வம், பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் பண்ருட்டி போலீஸ் குற்றப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையிலான தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கொட்டி கோணாங்குப்பத்தை சேர்ந்த பரம சிவம் மகன் ராஜதுரை (36) என்பவர் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து ராஜதுரையை போலீ சார் கைது செய்தனர். அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.