கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு கிராமத்தில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதர் திருக்கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு நேற்று இரவு திருக்கல்யாணம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இது மட்டும் இல்லாமல் இன்றோடு கந்த சஷ்டி விழா நிறைவு பெற்றது.