பண்ருட்டி குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் தங்கவேல், முதல் நிலை காவலர்கள் ஹரிகரன், ஜோதிநாதன் ஆகியோர் சென்னை கும்பகோணம் சாலையில் TRV திருமண மண்டபம் அருகே வாகன சோதனையின்போது வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்ததில், ஆட்டோவில் இருந்த நபர் தப்பி ஓடிய நிலையில் ஆட்டோ ஓட்டுனரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் காடாம்புலியூர் கீழ்இருப்பு கிராமத்திலிருந்து ஆடு திருடி வந்ததாக ஒப்புக்கொண்ட நிலையில் ஆடு திருட பயன்பட்ட ஆட்டோ மற்றும் ஆடுகளை மீட்டு எதிரி பிரபு வயது 41 த/பெ ராஜி, பழைய கடலூர் மெயின் ரோடு, திருவதிகை என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பி ஓடிய ஆண்டிபாளையத்தை சேர்ந்த விஜி என்பவரை தேடி வருகின்றனர்.