தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தை மூன்றாகப் பிரித்து தமிழ்நாடு மின் விநியோக கார்ப்பரேஷன் கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் மற்றும் தமிழ்நாடு பசுமை மின் உற்பத்தி கழகம் என தமிழக அரசு தன்னிச்சையாக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
அரசாணையை திரும்ப பெற வலியுறுத்தி கடலூர் சாவடி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய தொழிலாளர் சம்மேளனம் சார்பில்
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.