கடலூர் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல்

2948பார்த்தது
கடலூர் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல்
கடலூர் அடுத்த உச்சிமேட்டை சேர்ந்தவர் சங்கவி. கட்டட தொழில் செய்து வந்தார். இவர் கடலூரில் கட்டடவேலை செய்தார். அப்போது உடன் வேலை செய்த அதே ஊரை சேர்ந்த தமிழரசன் மீது சிமெண்ட் கலவையை தவறுதலாக கொட்டியதாக தெரிகிறது. இதனால் தகராறு ஏற்பட்டது. தமிழரசன் நேற்றுமுன்தினம் இரவு குடிபோதையில் சங்கவி வீட்டிற்கு சென்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார். புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் தமிழரசனை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி