மின்னல் தாக்கியதில் கன்றுக்குட்டி உயிரிழப்பு

573பார்த்தது
மின்னல் தாக்கியதில் கன்றுக்குட்டி உயிரிழப்பு
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் தோப்பு தெருவை சேர்ந்த கணேசன் மனைவி தில்லைக்கரசி நேற்று இரவு இடி மின்னலுடன் மழை பெய்ததால் வீட்டின் வெளியே கட்டியிருந்த பசு மற்றும் கன்று குட்டியை மாட்டுகொட்டை கையில் கட்ட அவிழ்த்து சென்றார்.

அப்போது திடீரென கன்றுக்குட்டி மீது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இறந்தது. தில்லைக்கரசி படுகாயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி