பண்ருட்டி அருகே வாலிபர் மீது வழக்கு

64பார்த்தது
பண்ருட்டி அருகே வாலிபர் மீது வழக்கு
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பெரிய எலந்தம்பட்டு கிராமத்தை சேர்ந்த தில்லை கோவிந்தன் மகன் ஸ்ரீகாந்த் வயது 21 என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் பண்ருட்டி பகுதியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவியை காதலித்து வந்தார். அப்போது அவர் மாணவியை கட்டாயப்படுத்தி பலமுறை உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது.

தற்போது அந்த மாணவி கர்ப்பமானார். இதுபற்றி அறிந்து அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய் இதுபற்றி பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் ஸ்ரீகாந்த் மீது அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி