கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் வள்ளலார் வர்த்தகர்கள் பாதுகாப்பு சங்க மாதாந்திர நிர்வாகிகள் கூட்டம் நேற்று வடலூரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிர்வாகிகள் அனைவருக்கும் உறுப்பினர் படிவம் வழங்கப்பட்டது. மேலும் இதில் வடலூர் வள்ளலார் வர்த்தகர்கள் பாதுகாப்பு சங்கத்தின் வளர்ச்சி குறித்து பேசப்பட்டது.