நெய்வேலி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கண்ணுத்தோப்பு பாலம் கடந்த ஆண்டு ஏற்பட்ட மழையின் காரணமாக சேதம் அடைந்ததால் பொதுமக்களின் போக்குவரத்து பாதிப்பு இருந்து வந்ததை அறிந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS மேற்படி இடத்தை பார்வையிட்டு கண்ணுத்தோப்பு பாலத்தை சரி செய்து போக்குவரத்து பிரச்சனை ஏற்படாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்ததின்பேரில் நெய்வேலி துணை காவல் கண்காணிப்பாளர் C. P. ராதாகிருஷ்ணன், காவல் ஆய்வாளர் வீரமணி ஆகியோர் நெய்வேலி என். எல். சி உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு மேற்படி பாலத்தை சீரமைத்து தருமாறு கோரிக்கை விடுத்ததன்பேரில் என். எல். சி. நிர்வாகம் சார்பில் சாலையை சீரமைத்தனர். காவல்துறையினரின் முயற்சியால் பாலம் சீரமைக்கப்பட்டு இன்று முதல் இருவழி பாதையாக பொதுமக்கள் வாகன போக்குவரத்து மேற்கொண்டு வருகிறார்கள்.