பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நெய்வேலி ஆர்ச்கேட் அருகில் உள்ள KNT-திருமண மஹாலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நெய்வேலி மற்றும் பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் தலா ஒரு லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றும், ஒவ்வொரு கிளைக்கும் 25-பொறுப்பாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என்றும், ஒவ்வொரு வாக்கு சாவடிகளுக்கும் 10- வாக்குச்சாவடி களப்பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.