கடலூர் மாவட்டம் நெய்வேலி 10வது வட்டத்தில் லிக்னைட் அரங்கில் 24வது புத்தகக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியின் தொடக்க விழா நேற்று (ஜூலை 4) நடைபெற்றது. இதில் ஐதராபாத்தில் இருந்தபடி காணொளி காட்சி மூலமாக மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை மந்திரி ஜி. கிஷன் ரெட்டி புத்தகக் கண்காட்சியைத் திறந்து வைத்தார். வருகின்ற ஜூலை 14ஆம் தேதி வரை புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது.