குள்ளஞ்சாவடி: அரசு பள்ளியில் விழிப்புணர்வு

72பார்த்தது
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அரசு மேல்நிலைப்பள்ளியில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அரசாங்கம் பணியாற்றும் 90 சதவீதம் அரசு அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் அரசு பள்ளியிலிருந்து படித்து வந்தவர்கள்தான். அதற்கு உதாரணம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றும் நான் உங்களை போன்று அரசு பள்ளியில் படித்துத்தான். இப்பதவிக்கு வந்துள்ளேன். அரசு பள்ளி ஆசிரியர்கள் எல்லா விதத்திலும் தகுதியானவர்கள் எனவே அவர்களின் வழிகாட்டுதலின்படி கல்வி பயின்று ஒழுக்கத்தில் சிறந்து விளங்க வேண்டும் மேலும் தாய், தந்தை மற்றும் ஆசிரியர்கள் நல்ல வழிகாட்டுதலை பின்பற்றி வேண்டும் எனவும், போதைப் பொருட்கள் பயன்பாடு முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முன்னதாக பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டும் , போதை பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழியை ஏற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி