கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கீழூர் கிராமத்தில் வினோத் பிரதர்ஸ் மாவீரன் தம்பிகள் நடத்தும் கைப்பந்து போட்டியினை நேற்று(செப்.15) இரவு பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு பாமக மாவட்ட செயலாளர் ஜெகன் தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு அணி வீரர்கள் கலந்து கொண்டு தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இதில் வெற்றி பெறும் அணிக்கு பரிசுத்தொகை மற்றும் கோப்பைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.