கடலூர்: என்எல்சி அதிகாரிகளிடம் கிராம மக்கள் கடும் வாக்குவாதம்

77பார்த்தது
நெய்வேலி என்எல்சி நிறுவனம் தனது சுரங்கம் 2 விரிவாக்க பணியை செத்தியாதோப்பு அருகே கரிவெட்டி கிராமத்தில் மேற்கொண்டு வரும் நிலையில் தற்போழுது வரை சுமார் 60க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கரிவெட்டி கிராமத்தில் வசித்து வருகின்ற நிலையில் இழப்பீட்டுத் தொகையும் வேலைவாய்ப்பும் வழங்காமல் கிராமத்திற்குச் செல்லும் சாலையை துண்டிக்க முயன்ற என்எல்சி அதிகாரிகளின் வாகனத்தை கரிவெட்டி கிராம மக்கள் திடீரென சிறைபிடித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

மேலும் குடியிருப்புப் பகுதிகளுக்கு மிகவும் அருகாமையில் சுரங்க விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் மக்கள் வாழ்வதற்கே தகுதியற்ற இடமாக மாறிவருவதாகவும் ஆனால் என்எல்சி நிறுவனம் இழப்பீடு வேலைவாய்ப்பு வழங்காமல் எங்களை கிராமத்திலிருந்து வெளியேற்ற முயற்சி செய்வதாக குற்றம்சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் செல்வ மகேஷ் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். நீண்ட நேரம் நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டம் அதிகாரிகள் பொதுமக்கள் பேச்சுவார்த்தையில் கூடிய விரைவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதற்கான கூட்டம் நடத்தி இழப்பீடு வழங்காத குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததில் பேரில் போராட்டக்காரர்கள் முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி