தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நெய்வேலி சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் அழகப்பாசமுத்திரம் ஊராட்சி R. C. நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், எழுது பொருட்கள், விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நேற்று (23. 12. 24), நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராஜேந்திரன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.