குறிஞ்சிப்பாடி வட்டம் விழப்பள்ளம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று கார்த்திகை மாத கிருத்திகையை முன்னிட்டு சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இரவு ரத்தத்தில் சுவாமி வீதியுலா காட்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.