கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் பேருந்து நிலையம் அருகில் வாரம் தோறும் சனிக்கிழமை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் நேற்று நடைபெற்ற வாரச்சந்தையில் காய்கறி விலை குறைவாக இருக்கும் என்பதால் ஏராளமான பொதுமக்கள் காய்கறி வாங்கி சென்றனர். இதனால் அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.