ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்
சஞ்சய் சிங் கைது செய்ததை கண்டித்து கண்டன
ஆர்ப்பாட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூரில் 6 ஆம் தேதி நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் ஞானராஜ் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் சக்தி ஆனந்தம், கிழக்கு மாவட்டம் மகளிர் அணி செயலாளர் ஷர்மிளா பர்வீன், நெய்வேலி தொகுதி தலைவர் ஜானி முன்னிலை வகித்தனர்.