கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் பேருந்து நிலையம் அருகே மாதம் தோறும் சனிக்கிழமை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். தற்போது பெய்து வரும் மழையினால் அப்பகுதி முழுவதும் சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மற்றும் கடை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.