கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் புரட்டாசி மாதம் முழுவதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இன்று 3-வது சனிக்கிழமை என்பதால் நேற்று முன்தினம் முதல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திருவந்திபுரத்திற்கு வந்தனர்.
திருவந்திபுரம் சாலக்கரை இலுப்பைதோப்பில் அமைந்துள்ள மொட்டை அடிக்கும் கூடாரத்தில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில் மொட்டை அடித்து சாமி கும்பிட்டு சென்றனர்.