கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள சக்திமிகு முத்துமாரியம்மன் கோயில் அருகே புதிதாக சிமெண்ட் சாலை கடந்த மாதம் அமைக்கப்பட்டது. தற்போது பெய்த கனமழை காரணமாக புதிய சிமெண்ட் சாலையில் குளம் போல் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கால்வாய் வசதி ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.