கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள ஐயப்பன் கோவிலில் இன்று கார்த்திகை மாதம் 1 ஆம் தேதி கோவில் திறக்கப்பட்டு சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இது மட்டுமல்லாமல் மின் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.