கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் எழுந்தருளியுள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சசுவாமி வீதியுலா காட்சி நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.