கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள பிரசித்தி பெற்ற ஶ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோவிலில் இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இது மட்டும் இல்லாமல் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.