கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள குளம் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபாதை மற்றும் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து குளத்தின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் நடைபாதைக்காக கட்டப்பட்ட தடுப்பு கட்டைகள் மூழ்கி உள்ளது. இதனால் நடைபாதை கட்டும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.