கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மீன் மார்க்கெட் அருகில் உள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு அர்ச்சுனன் வில் வளைத்தல் மற்றும் அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.