கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் குள்ளஞ்சாவடி போலீசார் நேற்று சிந்தாமணிக்குப்பம் பெரியகாட்டுசாகை பகுதிகளில் ரோந்து சென்றனர். அங்கு அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட்டுகளை பெட்டிக்கடையில் விற்றது தெரியவந்தது.
அதையடுத்து பெட்டிக்கடை நடத்திய சிந்தாமணிக்குப்பம், மதுரகாளி கோவில் தெருவை சேர்ந்த பாலமுருகன், பெரியகாட்டு சாகையை சேர்ந்த ஆறுமுகம் இருவரை போலீசார் கைது செய்தனர்.