வடலூர்நகராட்சி நிர்வாகத்தின் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டதை தொடர்ந்து நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சிஎஸ்ஆர் நிதி மூலம் வடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 7 வது வார்டு காட்டுக்கொல்லை பகுதியில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு பழுதடைந்ததை தொடர்ந்து நெய்வேலி என்எல்சி அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். உடன் வடலூர் நகர்மன்ற தலைவர் சிவக்குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.