கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் பெத்தநாயக்கன்குப்பம் சிங்கபுரி வள்ளலார் நகரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ செல்வ சிங்காரவேலர், ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் திருக்கோவிலில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று முதல் மண்டல அபிஷேகம் நடைபெற உள்ளது.