இருசக்கர வாகனம் திருடிய இரண்டு பேர் கைது

64பார்த்தது
இருசக்கர வாகனம் திருடிய இரண்டு பேர் கைது
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான காவல் துறையினர் நேற்று வடவாறு அருகே சிதம்பரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழி யாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் 2 பேரை காவல் துறையினர் சந்தேகத்தின்பேரில் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் இருவரும் குமராட் சியை சேர்ந்த சேட்டு, பைசல் ஆகியோர் என்பதும் ரம்ஜான் தைக்கால் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த திலீபன் என்பவருக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை திருடி ஓட்டி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனம் மீட்கப்பட்டது. கைதான சேட்டு மீது சிதம்பரம், ஒரத்தூர் காவல் நிலையங்களில் இருசக்கர வாகனங்கள் திருட்டு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி