ஸ்ரீ முஷ்ணம்: மதுபாட்டில்கள் விற்ற 3 பேர் கைது

61பார்த்தது
ஸ்ரீ முஷ்ணம்: மதுபாட்டில்கள் விற்ற 3 பேர் கைது
ஸ்ரீ முஷ்ணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான காவல் துறையினர் ரோந்து பணியில் இருந்தனர்.

அப்போது புதிய பஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள சுடுகாட்டு பகுதியில் மதுபாட்டில்களை விற்பனை செய்துகொண்டிருந்த 3 மர்ம நபர்களை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா, பவளத்தான்புரம் கணேசன் மகன் ஜெயபால், விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தாலுகா, நரிக்குடி அஞ்சல், விடத்துக்குளம் பகுதியை சேர்ந்த கயிலை நாதத்தேவர் மகன் பசும் பொன் தேவன், புதுக்கோட்டை கீழராஜ வீதியை சேர்ந்த முத்து மகன் ஜீவானந்தம் என்பதும், மதுபாட்டில்களை வாங்கி சட்ட விரோதமாக விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.