காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ அறிக்கை வெளியீடு

67பார்த்தது
காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ அறிக்கை வெளியீடு
தமிழகத்தில் ஆணவ படுகொலைகள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன அண்மையில் தர்மபுரியில் இஸ்லாமிய சகோதரர் முஹம்மது ஆசிப் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த படுகொலைக்கு காரணமானவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கைதான கொலையாளிகள் அனைவரையும் குண்டர்த்தடுப்பு சட்டத்தில் சிறைப்படுத்தி, புலன் விசாரணையை செய்து முடித்து மூன்று மாதங்களுக்குள் அவர்களுக்கு சட்டப்பூர்வ தண்டனை வழங்க வேண்டும்! நேரடியாக கொலையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

கொலையாளிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட யாரும் கொலையின் சதிஆலோசனையில் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என்பதையும் காவல்துறை விசாரித்து கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொடரும் இக்கொடூரங்களை கருத்தில் கொண்டு தமிழக அரசு ஆணவ படுகொலைகளை தடுக்க அவசர சட்டம் ஒன்றை பிறப்பிக்க வேண்டும் என காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி