காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டை வீராணம் ஏரி கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரம் ஆகும். இதன் முழு கொள்ளளவு 47. 50 அடி ஆகும். இந்த ஏரியின் மூலம் சிதம்பரம், காட்டுமன்னார் கோவில், புவனகிரி வட்ட பகுதிகளில் உள்ள 44 ஆயிரத்து 857 ஏக்கர் விளை நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பும் முக்கிய ஆதாரமாக விளக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது லால்பேட்டை வீராணம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.