காட்டுமன்னார்கோவில்: புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது

50பார்த்தது
காட்டுமன்னார்கோவில்: புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான காவல் துறையினர் வடவாறு பாலம் அருகில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். 

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ரம்ஜான் தைக்கால் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த முகமது சவுகத் அலி என்பவரை நிறுத்தி சோதனை செய்த போது ஒரு சாக்கு மூட்டையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 14 கிலோ 400 கிராம் புகையிலை பொருட்கள் இருந்தது. இதையடுத்து புகையிலை பொருட்களை கடத்திய தாக முகமது சவுகத் அலியை காவல் துறையினர் கைது செய்து புகையிலை பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் இவருக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக அரியலூர் மாவட்டம் பாப்பாக்குடியில் பெட்டிக்கடை நடத்தி வரும் குமரன் என்பவரையும் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி