கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பேருந்து நிலையத்திலிருந்து சிதம்பரம் செல்வதற்கு போதுமான பேருந்து வசதி இல்லாததால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர்.
இந்த நிலையில் புதிய பேருந்தை காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ.கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் அரசு அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.