சென்னை பூந்தமல்லி சீனிவாச நகரை சேர்ந்தவர் புகழ் இறைவன். இவரது மனைவி அன்னப்பூரணி. சம்பவத்தன்று இவர் சென்னையில் இருந்து கடலூர் மாவட்டம் குமராட்சி அருகே வீரநத்தம் கிராமத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது தனது பையை சோதனை செய்து பார்த்த போது அதில் வைத்திருந்த 6½ பவுன் நகையை காணவில்லை. இதுகுறித்து அன்னப்பூரணி கொடுத்த புகாரின் பேரில் குமராட்சி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து நகை எப்படி மாயமானது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.