கடலூர்: மனைவியை தாக்கிய கணவன் கைது

52பார்த்தது
கடலூர்: மனைவியை தாக்கிய கணவன் கைது
அரியலூர் மாவட்டம் சிலம்பூரை சேர்ந்தவர் வெற்றிச்செல்வன் வயது 32. இவரது மனைவி சத்யா கடலூர் மாவட்டம் குமராட்சியை சேர்ந்தவர் வயது 32. இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கோபித்துக் கொண்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள குமராட்சியில் உள்ள தாய் வீட்டிற்கு வந்தார் சத்யா. 

இந்நிலையில் 8:00 மணி அன்று டிசம்பர் 24 அன்று கணவர் குடித்துவிட்டு மாமனார் வீட்டிற்கு வந்த சத்யாவை குடும்பம் நடத்துமாறு அழைத்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் சத்யாவை உருட்டு கட்டையால் தாக்கினார். குமராட்சி காவல் நிலையத்தில் சத்யா கொடுத்த புகாரின் பேரில் கணவன் வெற்றிச்செல்வன் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர் போலீசார்.

தொடர்புடைய செய்தி