தமிழ் வரலாற்று ஆய்வாளர் , கடலியல் தமிழ்சார் ஆய்வாளர் ஒரிசா பாலு (எ) சிவசுப்பிரமணியன் புற்றுநோயின் காரணமாக காலமானார் என்கிற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.
அரிதாக பழகியிருந்தாலும் மிகுந்த நல்ல மனிதர், அவரது மறைவு தமிழ்சமூகத்திற்கு பேரிழப்பு. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்ப உறவினர் மற்றும் தமிழ் சொந்தங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ சிந்தனைச்செல்வன் தெரிவித்துள்ளார்.