திட்டக்குடி அருகே பாம்பு கடித்து குழந்தை உயிரிழப்பு

79பார்த்தது
திட்டக்குடி அருகே பாம்பு கடித்து குழந்தை உயிரிழப்பு
கடலூர் மாவட்டம் திட்டக்குடி ராமநத்தம் அடுத்துள்ள எழுத்தூர் கிராமத்தை சேர்ந்த ஆனந்த் மகன் விஷ்வ மித்ரன் (வயது 2 1/2 ). இவன் வீட்டில் விளையாடி கொண்டிருந்தபோது விஷ பாம்பு கடித்ததாக கூறி அவனை பெற்றோர் சிகிச்சைக்காக பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

முதல் உதவிசிகிச்சைக்கு பின்னர் விஷ்வ மித்ரனை அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவன் பரிதாபமாக இறந்தான். இது குறித்து ராமநத்தம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி