வருகின்ற மார்ச் 22 உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, தமிழகத்தில் மார்ச் 23 அன்று நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் நீர் ஆதாரங்களை பாதுகாக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றக் கோரி கடலூர் மாவட்டத்தில் வீராணம் ஏரியை பாதுகாக்க வலியுறுத்தி பசுமைத்தாயகம் சார்பில் பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்வுக்கு கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் செல்வ.மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் மற்றும் பசுமைத்தாயகம் மாநில துணைச் செயலாளர் தி. அழகரசன், பசுமைத்தாயகம் மாவட்ட செயலாளர் இரா. ராஜவேல், மாவட்டத் துணைத் தலைவர் அன்புச்செல்வன், மாவட்ட துணைச் செயலாளர் செல்வகுமார், ஒன்றிய செயலாளர் ம.தவசிலன் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் பசுமைத்தாயகம் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.