கடலூர் வில்வநகரில் உள்ள பெருந்தேவி தாயார் சமேத ஆட்கொண்ட வரதராஜ பெருமாள் கோயிலில் 27ஆம் ஆண்டு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று காலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று காலை 10 மணி அளவில் நாதஸ்வர மேளக் கச்சேரியுடன் சுவாமி வீதியுலா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.