கடலூரில் பெருமாள் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

83பார்த்தது
கடலூர் எஸ். பி அலுவலகம் அருகே அமைந்துள்ள ஸ்ரீ கஜேந்திர பெருமாள் கோவிலில் புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. பின்னர் இன்று இரவு சிறப்பு ஊஞ்சல் சேவை உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு சுவாமி பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி