கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் இன்று(அக்.02) அதிகாலை வரை பரவலாக கனமழை பெய்தது. இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி வானமாதேவியில் 48 மில்லி மீட்டர், எஸ். ஆர். சி. குடிதாங்கி 43 மில்லி மீட்டர், கடலூரில் 21. 6 மில்லி மீட்டர், வடக்குத்தில் 4 மில்லி மீட்டர், பண்ருட்டி 1 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது மட்டும் இல்லாமல் பல்வேறு இடங்களில் மழைநீர் நீர் தேக்கி நிற்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.