கடலூர் மாவட்டம் எஸ். என். சாவடி அருகே பள்ளிநேலியனூர் சாலை முகப்பு பகுதியில் குப்பைகள் மற்றும் கழிவுகள் கொட்டப்படுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.
இதனால் அவ்வழியாக செல்பவர்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சாலை ஓரத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பை மற்றும் கழிவுகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை வேண்டுமென சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.