கடலூரில் கடந்த சில மாதங்களாக வெள்ளைப் பூண்டு விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த நிலையில் கடலூர் அடுத்த கோண்டூர் பகுதி மளிகைக் கடைகளில் இன்று வெள்ளை பூண்டு விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ. 450ஐ தொட்டது. மேலும் அடுத்த 4 மாதங்களுக்கு பூண்டு விலை குறைய வாய்ப்பில்லை என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.