கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு தினமும் கடலூர் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக வந்து செல்வர். இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான நாய்கள் சுற்றித் திரிகின்றன. சில சமயங்களில் இந்த நாய்கள் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை துரத்தவும் செய்கின்றன. எனவே மருத்துவமனை வளாகத்தில் சுற்றித் திரியும் நாய்களை பிடிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.