கடலூரில் கைதி திடிரென உயிரிழப்பு

85பார்த்தது
கடலூரில் கைதி திடிரென உயிரிழப்பு
கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை அமைந் துள்ளது. இங்கு 700 ற்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர்.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் பெரியப்பட்டு காலனியை சேர்ந்த ஆறுமுகம் என்கிற செவிடன் என்பவர் கடந்த 2022-ம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதற்கிடையே கடந்த 4 ஆம் தேதி ஆறுமுகத்திற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே காவல் துறையினர் அவரை சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று காலை ஆறுமுகம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி